500 Internal Server Error


nginx
நிறுவுதல் கட்டளைகள் - மான்ட்ரிவ லினக்ஸ் 2007

Mandriva Linux

மாண்ட்ரேக் லினக்ஸ்

தேவைப்படும் கணினி அமைப்பு

மாண்ட்ரேக் லினக்ஸை நிறுவும் முறை மிக எளிமையானது. பெரும்பாலும், லினக்ஸ் சிடியை இயக்கியினுள்(cd drive) பொருத்தி கணினியை மறுதொடக்கம் செய்தால் போதும். தயவுசெய்து விபரம் 1 யை காணவும்.

குறிப்பு:


கீழ்க்கண்டவை மான்ட்ரிவ லினக்ஸை நிறுவுவதற்கான பல்வேறு வழிகள்:

  1. நேரடியாக சிடியிலிருந்து தொடங்குதல்.
  2. விண்டோசை பயன்படுத்தி தொடங்கு நெகிழ்வட்டு(boot floppy disk) உருவாக்குதல்.
  3. பிற வழிகளில் நிறுவுதல்.


1. நேரடியாக சிடியிலிருந்து தொடங்குதல்.

நிறுவும் சிடியைப் பயன்படுத்தி லினக்ைஸ தொடங்கலாம். லினக்ஸ் சிடியை இயக்கியினுள் பொருத்தி, கணினியை மறுதொடக்கம் செய்யுவும். பிறகு, கணினித் திரையில் தோன்றும் ஆணைகளை பின்பற்றுங்கள். நிறுவுவதற்கு [Enter] விசையையும் உதவி கோப்பிற்கு [F1] விசையையும் அழுத்தவும்.

குறிப்பு:

சில கணினிகளில், சிடியிலிருந்து தொடங்க முடியாமல் போகலாம். இது போன்ற சூழலில் தொடங்கு நெகிழ்வட்டை உருவாக்க வேண்டும். விவரங்களுக்கு விபரம் 2 ஐ படியுங்கள்.

[இந்தப்பக்கத்தின் மேலே]


2. விண்டோசை பயன்படுத்தி தொடங்கு நெகிழ்வட்டு(boot floppy disk) உருவாக்குதல்.

லினக்ஸ் சிடியை பயன்படுத்தி தொடங்க முடியாவிட்டாலோ அல்லது மேற்கூறிய வழிகள் பயனளிக்கவில்லை என்றாலோ, விண்டோசை பயன்படுத்தி தொடங்கு நெகிழ்வட்டை உருவாக்குவது அவசியம்.

நிறுவுதலை தொடங்க:

[இந்தப்பக்கத்தின் மேலே]


3. பிற வழிகளில் நிறுவுதல்.

மேற்கூறிய வழிமுறைகள் உங்களுக்கு பொருந்தவில்லையெனில் (உதா: கணினி வலையமைப்பில் லினக்ைஸ நிறுவுதல் அல்லது pcmcia சாதனத்தில் நிறுவதல்) தொடங்கு நெகிழ்வட்டை உருவாக்க வேண்டும்.

தொடங்கல் பிம்பங்கள் பட்டியல் இங்கே:

cdrom.img சிடிவட்டிலிருந்து நிருவும்போது
hd_grub.img வன்வட்டிலிருந்து(harddisk) நிறுவும்போது(லினிக்சில் அல்லது விண்டோஸ் அல்லது ReiserFS கோப்பு)
உங்களது கணினிக்கு நீங்கள் இங்கே வரையறுக்க: http://qa.mandriva.com/hd_grub.cgi
network.img ftp/nfs/http யிலிருந்து நிறுவும்போது
குறிப்பு: உங்களது நெகிழ்வட்டு இயக்கியில் network_drivers.img ஐ கேட்கும்பொழுது சொருக வேண்டும்
pcmcia.img pcmcia சாதனங்களிலிருந்து நிறுவ (எச்சரிக்கை, மேலான pcmcia வலை அடாப்டர்கள் இப்பொழுது நேரடியாக network.img லிருந்து ஆதரிக்கப்படுகின்றன)

நீங்கள் boot.iso மென்தட்டில் எழுதி கூட தொடங்கலை ஆரம்பிக்கலாம். அது அனைத்து நிறுவல் முறைகளையும் ஆதரிக்கிறது, மென்தட்டு, வலையமைப்பு, மற்றும் வன்தட்டு.

[இந்தப்பக்கத்தின் மேலே]


கொடாநிலை வரைவியல்வழு நிறிவலை பயன்படுத்துவதில் சிரமமிருந்தால், உரைவழியைப் பயன்படுத்தி நிறுவலாம். மாண்ட்ரேக் லினக்ஸ் வரவேற்பு திரை தோன்றியதும், [F1] விசையை அழுத்தவும். பிறகு “text” என்று உள்ளீடுங்கள்.

ஏற்கனவே நிறுவப்பட்டிருக்கும் மாண்ட்ரேக் லினிக்ஸை மீட்கவேண்டுமெனில், நிறுவல்சிடியைப் பொருத்துங்கள் (அல்லது சார்ந்த நெகில்வட்டு). மாண்ட்ரேக் லினக்ஸ் வரவேற்பு திரை தோன்றியதும், [F1] விசையை அழுத்தவும். பிறகு “rescue” என்று உள்ளீடுங்கள்.

மேலும் தொழில்நுட்பம் சார்ந்த தகவல்களுக்கு http://www.mandrivalinux.com/drakx/README கோப்பை படிக்கவும்.

[இந்தப்பக்கத்தின் மேலே]


நிறுவதலின் முக்கியமான கட்டங்கள்:

  1. லினக்ஸ் சிடியை இயக்கியினுள் பொருத்தி (தேவைப்பட்டால் நெகிழ்வட்டை பயன்படுத்தவும்), கணினியை மறுதொடக்கம் செய்யுங்கள்.
  2. மாண்ட்ரேக் லினக்ஸ் வரவேற்பு திரை தோன்றியதும் [Enter] விசையை அழுத்தவும். பிறகு திரையில் தோண்றும் ஆணைகளைக் கவனமாக பின்பற்றுங்கள்.
  3. நிறுவுதல் முடிவுற்றபின் சிடியை வெளியே எடுங்கள் (நெகிழ்வட்டையும் வெளியே எடுக்கவும்). உங்கள் கணினி தானாகவே தொடங்கும். இல்லையெனில் நீங்களே தொடங்குங்கள்.
  4. மாண்ட்ரேக் லினின்ஸ் தொடங்கியவுடன் பயனர்பெயர் (username) அல்லது “root” பயன்படுத்தி நுழையவாம்.

முக்கிய குறிப்பு:

இந்த “"root"” கணக்கைப் பயன்படுத்தி, கட்டுப்பாடற்ற அணுகலை (எந்த கோப்பையும் நீக்கலாம், திருத்தலாம், பெயர்மாற்றம் செய்யலாம்) பெறலாம். மைய அமைப்பை மாற்றவும், லினக்ைஸ நிர்வாகிக்க மட்டுமே இக்கணக்கை பயன்படுத்துங்கள். தினசரி பயன்பாட்டிற்கு ஒரு சாதாரன பயனர் கணக்கை பயன்படுத்துங்கள். பயனரை உருவாக்க, "userdrake" சாதனம் அல்லது "adduser" மற்றும் "passwd" கட்டளைகளைப் பயன்படுத்தலாம்.

நீங்கள் மாண்ட்ரேக் லினக்ஸ் பயன்படுத்த எங்கள் வாழ்த்துக்கள்.

[இந்தப்பக்கத்தின் மேலே]


கூடுதல் ஆதரவிற்கு, கீழ்க்கண்டதை காணவும்:


500 Internal Server Error

500 Internal Server Error


nginx